ஆழ்மன யுத்தங்கள் - காதலாரா

ஆழ்மன யுத்தங்கள் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~
முதுகை துளைக்கும்
முரண்பட்டு பாய்ச்சல்கள்
வார்த்தை வடிவத்தில்
விரக்தியின் விதைகள் ..
அகம் அமுக்கிய
அசாத்திய அர்த்தங்கள்
முகம் மறைத்த
தேகத்தின் ஆசைகள் ....
தகர்ந்து தவறிய
ஆழ்மன யுத்தங்கள்
முதிர்ந்து முடங்கிய
முகமூடியின் முத்தங்கள் ...
ஏற்றுத் துரத்திய
நம்பிக்கை நகல்கள்
மாற்றம் விரும்பாத
போலியின் அசல்கள் ...
- காதலாரா