தமிழின் மைந்தன் - அகன்

அகன் அய்யா உண்மையில் மனிதம் போற்றும் மனிதர்...அவருக்கு ஒரு புகழ்மாலை சூட்டவில்லை என்றால் என் வார்த்தைகள் என்னைத் திட்டித் தீர்த்திவிடும்..இதோ படைக்கிறேன்...

எழுத்தினிலே இருக்கின்ற கவிஞர் தங்கள்
---எழுச்சிக்கு உதவுகின்ற ஏணி என்கோ ?
பழுத்ததுவாய் ஞானமது கொண்ட தாலே
---பழத்தமிழைச் சுவைக்கின்ற சிங்கம் என்கோ?
உழுகின்ற உழவர்க்கு மான்யம் என்கோ?
---உலகிற்கு வான்தூறும் மழையே என்கோ?
தொழுதற்கு மேற்றசெயல் செய்வ தாலே
---தொழுதிவனின் பேர்பாடி தலைவன் என்கோ ?

என்சொல்லிப் புகழ்வதுவோ ? ஏற்றும் உன்னை
---எடுத்தெமக்குச் சொல்லுமய்யா அகனே ! சொல்லின்
மன்னனெனச் சொல்வதுவோ எம்மைத் தூக்கி
---மகிழ்வினிலே ஆழ்த்திடும் தாய்தான் என்கோ?
இன்னும்நான் என்சொல்ல தமிழின் மைந்தா
---இயலவில்லை உம்மைநான் நினைக்கும் போழ்தில்
என்மூச்சும் முட்டித்தான் போகு தய்யா
---என்றென்றும் உன்புகழோ நீடு வாழ்க !

சரியா அய்யா.......வாழ்த்துரை எழுதிவிட்ட வார்த்தைகள் சந்தோசம் பெறுகின்றன.....

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (29-Oct-15, 7:19 am)
பார்வை : 244

மேலே