சிறுகதை என்றால் என்ன – சுஜாதா

சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.…கதையை எப்படி சொல்ல வேண்டும்?கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம் தான் எனக்குத் தெரிந்து. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்.ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ, ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (31-Oct-15, 9:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 381

புதிய படைப்புகள்

மேலே