காதோடு தான்
காதோடு தான் ...!
காதோடு தான்
நான் பேசுவேன்...!
காற்றாகத் தானுன்
குழல் கோதுவேன்...!
கனவோடு தான்
தினம் தூங்குவேன்...!
கவிபாடத் தானுன்
கொலுசா குவேன்...!
விழிபூக்கத் தான்
நிதம் ஏங்குவேன்...!
மதிபோலத் தானுன்
முகம் ஏந்துவேன்...!
நடைகாணத் தான்
படை தாங்குவேன்...!
விடையாகத் தானுன்
உடை யாகுவேன்...!