ஏன் இந்த கொலைவெறிகள்
ஏன் இந்த கொலைவெறிகள்
அரசாங்கத்தின் நாடகங்கள்
மதுபான தீமைகளை
விளக்கினாலும்
சட்டவிரோத செயல்களாம்
இது எழுதாத சட்டங்களாம்
மதுவுக்கு எதிரா.முழங்கினா கைதுகளாம்
தனி மனித சுதந்திரத்தை
நசுக்குவது அரசோட வேலைகளாம்
தன் வாழ பிறரை கெடுக்காதே
மகான்களின்பொன் மொழிகள்
சரித்திரத்தில் சில மொழிகள்
தன் வாழ பிறரை கெடுப்பதுதான்
அரசாங்க பொன்மொழிகள்
சரித்திரத்தில் பொறிக்குதடா
காவல் துறை கண்ணியம் தான்
ஆனாலும் கைகட்டிய பொம்மைகள் தான்
மதுபான எதிரினிலே
போராடும் போராளிக்கு
அரசியல்வாதிகளின்
குளிர்காயும் நெருப்புகளாம்
ஆனாலும் நான் மதுவுக்கு எதிரான
போராளிதான்
போராடவே தயங்குகிறேன்
காரணம் மதுபானத்துக்கு
பெண்களின் ஆதாரவு அதிகமுண்டே