நேதாஜி சொன்னது நான் எனது மறுபிறப்பில் வீரம் நிரம்பி வழியும் தமிழனாய் பிறக்க விரும்புகிறேன்

சுதந்திரத்துக்கு பிறகான வரலாறு என்று நாம் பாட புத்தகத்தில் படித்த பல விசயங்கள் திரிக்கப்பட்டவை.....!

காந்தி அஹிம்சையை போதித்தவர், மரியாதைக்குறியவர், சுதந்திரத்துக்காக போராடியவர், போற்றப்பட வேண்டியவர்...அதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் சமகாலத்தில் மிகப் பெரும் அளவில் மாற்று வழியில் வீரமாக போராடிய நேதாஜி"யை இருட்டடிப்பு செய்தது ஏன் ? இது சரியா ?

நேதாஜி"யின் படைகள் கிழக்கு இந்தியாவில் சற்று பின் வாங்கியது உண்மைதான். அது இரண்டாம் உலகப்போரின் இறுதி சூழ்நிலையால் ஏற்பட்ட நிகழ்வுகளினால் நேதாஜியின் படைகள் பின்வாங்கியது உண்மை தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது தற்காலிகமான பின்வாங்கல்தான்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் 1945 க்கு பின் அவசர அவசரமாக சுதந்திரத்தை அவர்கள் அடுத்த இரண்டு வருடத்தில் கொடுக்காமலிருந்தால் நேதாஜி அதை போரிட்டு பெற்றிருப்பார். அவ்வாறு அவமானப்படும்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாதென்றும் இன்னும் பல்வேறு நெருக்கடிக்கிடையில் அவசரமாக காந்தி சார்ந்த போராட்ட குழுவினரின் மூலமாக சுதந்திரத்தை கொடுத்து விட்டனர்.

மாறாக நேதாஜி மூலம் சுதந்திரம் பெற்றிருந்தால் கடந்த 68 கால ஆண்டு இந்திய ஆட்சியும் வளர்ச்சியும் நிச்சயம் வேறு மாதிரி இருந்திருக்கும். இப்படி இன்று இருப்பதை போல் ஜாதியும், மதவெறியும், பெண்ணடிமைத் தனமும், லஞ்சமும், ஊழலும் புரையோடிப் போயிருக்காது.

சுதந்திரம் கிடைத்து 68 ஆண்டுகள் கழித்து இப்போழுது தான் பெண்களை ராணுவத்தில் போராட்ட பிரிவில் இணைத்துள்ளனர். ஆனால் நேதாஜி அப்போழுதே பெண்களை போராட்ட பிரிவில் இணைத்து அவர்களுக்கு சம அந்தஸ்த்து அளித்தவர். அவர்களும் படையில் பெரும் அளவில் இருந்தனர்.

அவர் இட்ட பெயர்தான் ( INA ) தற்பொழுது வரைக்கும் இந்திய ராணுவத்திற்கு பெயராய் இருக்கின்றது. ஆனால் அவருக்குரிய மரியாதையை சுதந்திரத்துக்கு பிந்தைய இந்திய அரசு இது வரையிலும் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை.

சுதந்திரம் கொடுக்கும் போது நேரு"விடம் ஆங்கில அரசு நேதாஜி கிடைத்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கி விட்டு சுதந்திரத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ?

நேதாஜி இறக்காமலே அவர் இறந்து விட்டதாக நேரு தலைமையிலான இந்திய அரசு அவர் இறந்து விட்டதாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

அவர் ஜப்பான் விமானத்தில் பயணம் செய்த போது விமானம் வெடித்து இறந்து விட்டதாக இந்திய அரசு சொன்னது. ஆனால் அப்படிப்பட்ட எதுவும் நடக்கவில்லை எங்கள் விமானம் எதுவும் வெடிக்கவில்லை என்று, இன்று வரை ஜப்பான் மறுத்து வருகிறது....! அதற்கு பதில் கூறாமல் இப்போதிருக்கும் இந்திய அரசு வரை மழுப்பி வருவதற்கான காரணம் என்ன...?

சமீபத்தில் நேரு தன் கைப்பட இங்கிலாந்துக்கு 1948 ல் எழுதிய ஒரு கடிதம் இணையத்தில் உலா வருகிறது.. அதில் உங்களது ராஜாங்க எதிரி ரஸ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இறந்த ஒருவரை பற்றி, யாராவது இப்படி கடிதம் எழுதுவார்களா...?

சுதந்திரத்துக்கு முன்பு சரி, ஆனால் சுதந்திரத்துக்கு பின்பு இங்கு அரசியல் சார்ந்து நாம் படித்த வரலாறுகள் எல்லாம் திரிக்கப்பட்டு புத்தகத்தில் அச்சேற்றப்பட்டு நம்மால் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டவை..அவைகளில் பெரும்பான்மைகளில் உண்மை இல்லை.. இது வரை நேதாஜி சம்பந்தமான தகவல்களை வெளியிட கூறிய பொழுது அதை பற்றி வாயே திறக்காத மத்திய அரசு இருந்திருகிறது...

இதற்கு முன் பெரும்பாலும் ஆட்சியில் இருந்த மத்திய அரசை ஆண்டவர்கள் அதை வெளியிட்டால் நாட்டில் பெரிய குழப்பமும் பிரட்ச்னையும் வரும் என்று கேட்ட போதெல்லாம் பல முறை எதனால் அப்படி சொன்னார்கள் ?

ஆனால் கடந்த மாதம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்காள அரசு தன்னிடமிருந்த நேதாஜி சம்பந்தமான பெருவாரியான ஆதாரங்களை வெளியிட்டுவிட்டது...இப்போது நேதஜியின் மகள் இந்திய பிரதமரை தனது குடும்பத்துடன் சந்தித்து நேதாஜி சம்பந்தமான ஆதாரங்களை வெளியிட வலியுறுத்திய பின் பிரதமர் அடுத்த மாதம் மத்திய அரசு அவற்றை முழுமையாக வெளியிடும் என்று உத்தரவிட்டுள்ளார். அவைகள் வந்தால் பல உண்மைகள் வெளிவரும்.....

வரலாற்றை படிக்கிறேன் என்று மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. நமக்கு இருக்கின்ற ஆறறிவைக் கொண்டு அவை உன்மைதானா என்று ஆராய்ந்து பகுத்தறிய தெரிய வேண்டும்.....!

நேதாஜியின் இந்திய படையில் பெரும்பங்கு இருந்தவர்கள் தமிழர்கள்....அவர் ஒரு முறை சொன்னது " நான் எனது மறுபிறப்பில் வீரம் நிரம்பி வழியும் தமிழனாய் பிறக்க விரும்புகிறேன்" .......

- Ajay Joz ( சுய ஆக்கம் )

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (4-Nov-15, 11:54 pm)
பார்வை : 500

மேலே