புல்வெளியில் சிறு பனித்துளி நான் 555

அழகே...

உன் பாதசுவடு தோறும் போர்வை
மூடும் எனது வேர்வைதுளிகள்...

கனவு பூக்களோடு
கை நிறைய நந்தவனம்...

கதவு திறந்தும் காணவில்லையே
என் தென்றல் முகம்...

கடைசி விடிவெள்ளியும் அனுதாபத்துடன்
நெடு மூச்சை எரிந்தது...

வெண்ணிலவும்
மறைய தொடங்குது...

இன்னும் கண்ணீர்
புல்வெளியில் நான்...

என் ஆவிபோகுமேன்னே
வருமோ என் வசந்த ஊர்வலம்...

ஒருமுறை
நான் பார்த்து செல்ல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Nov-15, 7:42 pm)
பார்வை : 152

மேலே