கைதிகள்

ஆத்திரத்தில் எழுந்த முகம்...
அமைதியாய் கழியும் யுகம்...
அவசரப்பட்டு அடித்ததில்
அநியாயமா உயிர் போச்சே ...

நேத்துவரைக்கும் நினைக்கலையே .
கோத்துவச்ச முத்துமால
விரல் கொஞ்சம் அழுத்தியதில்
பக்கத்துகொன்னா சிதறிருச்சே...

நீதிபதி சொன்னாக...
நீ செய்தது கொலைன்னு..
சாமி சத்தியமா கொலைன்னு நா செய்யல...
அழுத்தமா ஒரு அடி அடிச்சேன் ...
மயக்கம்னு விழுந்தான் ...
கண்ணே தொறக்கல ...மொத்தமா மூடிட்டான்...

எட்டு வருஷம் முழுசா போச்சே ...
எனக்கு இப்ப பூட்டு மட்டும் காவலாச்சே ...
என் பொஞ்சாதி வந்தா.. என் நாலு வயசு மகனோட ..

இரும்புக்கம்பி இடையில
பிஞ்சு கைய தொட்டு பார்க்க முடியலையே..
கண்ணெல்லாம் உப்புத்துளி ... கடகட ன்னு
வெளிவருதே...

போலிஸ் காரு விரட்டுராறு...
லத்தியால அடிக்கிறாரு...
அதப்பாத்த ஏ மவெ
அதிர்ந்து போயி கதர் ரானே ...

இதப்பார்கவா புள்ள பெத்தேன்
அய்யய்யோ !! நா உயிரோட செத்தேன் ..

அய்யா சாமிகளே.. கோபம் வேண்டாம்..
ஆத்திரம் வேண்டாம்..
பொறுமையா இருப்போம்...
உசிரு இருக்கிற வரைக்கும் ...தன்மையா வாழ்வோம்..



வருத்தத்தோடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (5-Nov-15, 8:04 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : kaithigal
பார்வை : 57

மேலே