உன் அழகில் நனைவதால்
உன் புகைப்படம்
அருமையாக வந்திருக்கிறது
என்பதனைவிட
நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள்
அதனால் புகைப்படம்
அருமையாக வந்திருக்கிறது என்பதே
பொருத்தமாக இருக்கிறது!
இதழான உதடும்
இதழியல் விழியும்
விரிந்து பூத்து இருப்பதால்
பார்வையாளர் மனமும்
அக மகிழும்!
ஒரு நிமிடமாவது
நின்று ரசித்துச் செல்லத் தூண்டும்!
எளிமையிலும் இனிமையாய் காட்சியளிப்பது
இயற்கையை ரசிப்பதுபோல்தான்!
உன்னை கூர்ந்து ரசிப்பதால் - எனக்குள்
வஞ்சனை எதுவும் இல்லை
அள்ளிக் கொள்வதற்கும்
பருகிக் கொள்வதற்கும்!
இறைவனின் படைப்பை நினைத்து
வியக்கிறேன்!
உன் அழகில் நனைவதால்!