ஒரு பிடி பழமொன்றியு

பழமொழிகளை மையமாகக் கொண்டு சென்றியு படைப்பது பழமொன்றியு. இதற்கு முன்னோடி நமது தமிழன்பன் அய்யா தான். இதோ நானும் முயலும் 'ஒரு பிடி பழமொன்றியு'

இளமையில் கள் !
சிச்சீ ! இது நாட்டு நடப்பு !
இளமையில் கல் !

'ஆடிப்பட்டம் தேடி விதை'
எதைத் தேட ?
வயலையா? உழவனையா?

'கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை'
இன்றைய அரசியல் பதவி !

திரைகடல் ஓடியும்
திரவியம்........மன்னிக்க
திரவத்தைத் தேடு !

'வெறும் பேச்சு பேசேல்'
இன்றைய
வாட்சப் ஸ்டேட்டஸ் !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-Nov-15, 11:56 am)
பார்வை : 152

மேலே