அம்மாட்சி

மெள்ளப் பல கதைகள் சொல்லி சிந்தனை வளர்க , நட பழக , செம்மொழி பேச, ஆர ரிரோ பாடி தூங்க, கூடிவிளையாட, மெய் பேச, ஆயிரம்யிரம் கற்றுகொடுத்தவளே!
உனக்கு யார் கற்றுகொடுத்தது சொல்லாமல் போக,
உள்ளம் குளிருதே, கல்லும் உருகுதே ஒற்றை நொடி உன்னை நினைத்தால்,
உள்ளம் கல்லாய் போகுதே ஒற்றை நொடி உன் வரவு இல்லாததால்?
தீராத சோகமே நீதானடி,
சொல்லில் அடங்குவதில்லை உன் நேசம், சொன்னால்தான் பொறுக்குமா என் நெஞ்சம்!

கசங்கிய சேலை, சுருங்கிய முகம், ஆனால் என்றும் மாறாத உன் பாசம்,
"மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது" யார் சொன்னது உன் நேசம் கூட தான் என்றும் மாறாதது,
என் சோகத்தை சொன்ன நேர்க்கோடு கூட வட்டமாகும், நிழல்கூட விட்டுப் போகுமே!

தாளாத துன்பம் நேர்கையில் தாயாக வருவாயே! என்று தவிக்க விட்டு எங்கே சென்றாய்?

வழி கேட்டு வாடுகிறேன் ஒரு வழிபோக்கன் போல.........

எழுதியவர் : Harris (7-Jul-10, 5:46 pm)
பார்வை : 470

மேலே