விழி வழி மொழி ஒரு தனி வலி
விழி வழி மொழி...
"உலகமெங்கும் ஒரே மொழி.
உள்ளம் பேசும் காதல் மொழி.
ஓசையின்றி பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி.."
அவள் இட்ட கோலம்,
அவன் நெஞ்சில் சொல்லவொன்னா தாளம்
யாருக்கும் கேட்காது
யாரிடம் சொன்னாலும் இனிக்காது.
"பூஜ்ஜியத்துகுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்" -
அவனைப்புரிகிறதோ இல்லையோ
அவனால் இந்த அழகிய காதலுக்கு
இங்கெல்லாரும் அடிமையாயினரே?
அவன் மட்டுமென்ன விதி விலக்கா ?
அன்பைக்கொண்டு ஆயுதம் செய்தால்
அது தான் காதல்!
அதை ஒரு நொடியில் செய்ய அவளுக்கு
தேவை ஒரே ஒரு பார்வை!
ஒரு அழியாத கோலமாய் அவள்
அவனுக்கு கலங்கரை விளக்கமாய்.
அழகான காதல் ஆழமாய் அவனுக்குள்
ஆழ்மனதில் அவளை உள்வாங்கி
கிடக்கிறான் கடலாய்
உணர்வில் புதியதாய் உருவாகிறது
காதல் சுனாமி...
_________________________________
*அவனை
நீ தான் காப்பாத்தணும், சாமி?