மீண்டும் மீண்டும் --- நான்கு --- வேண்டுகிறேன் நான் - போட்டிக்கவிதை
அதர்மம் ஒழியட்டுமே அகிலம் விட்டு
===அன்பு வாழட்டுமே அதிஷ்டம் பெற்று
அநீதி அழியட்டுமே எரிக்கப் பட்டு
===நீதி விளங்கட்டுமே விதைக்கப்பட்டு
தீவினை இங்கெதற்கு தீர்ந்து போவாய்
===துன்பத்தைக் கூட்டிக்கொண்டு ஓடிப் போவாய்
சீரிய சிந்தனைகள் மனதை ஆள
===சீரும் சிறப்புமாக மக்கள் வாழ
சாதியும் மதங்களுமே நலிந்து போக
===சாக்கடை மனிதரெல்லாம் மலிந்து போக
சோதியாய் மக்களெண்ணம் செழித்து ஒளிர
===சோதனை நாட்களெல்லாம் மறைந்து ஒழிய
விரோதம் குரோதங்கள் வீழ்ந்து ஓட
===ராக தாளங்கள் சேர்ந்து பாட
மகிழ்வும் புத்துணர்வும் எங்கும் நிறைய
===நல்லசேதி மட்டும் செவிக்கு விரைய
நேற்றும் இன்றும் வேண்டுகிறேன் நான்
===நிம்மதி மக்கள்பெற வேண்டுகிறேன் நான்
போதும் கண்ணீரென்று வேண்டுகிறேன் நான்
===மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன் நான்!!