அணு ஆயுத கால கனவு

உலக வரைபடத்தில்
நாடுகள் பிரிக்கும் கோடுகள்
இல்லாமல் போக வேண்டும்..
மாநிலங்கள் பிரிக்கின்ற கோடுகளும்தான்!
நீ வேறு நான் வேறு என்று பேதம் எங்கும்
இல்லாமல் போக வேண்டும்..
அனைவர்க்கும் ஓருலகம்..
அனைவர்க்கும் ஓர் கனவு ..
அனைவர்க்கும் ஒரே வாழ்வு..
அது இன்பமானதாக இருக்கட்டும்..
சிங்கங்கள் ஆடுகள் ஒன்றாய் சேர்ந்து வாழட்டும்
இது அணு ஆயுதக் காலத்துக் கனவு
என்பதை எழுதி வைக்க வேண்டும் நான் எங்காவது!
முடியும் என்றுதான் மனதில் தோன்றுகின்றது..
ஆனால் மனிதன் அதுவரை இருக்க முடியுமோ
என்று ஐயமும் கூடவே எழுகிறது..
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று சொன்ன எம் பாட்டனின்
கனவும் இதுதானோ என்றும் தோன்றுகிறது!

எழுதியவர் : பாலகங்காதரன் (18-Nov-15, 12:00 pm)
பார்வை : 153

மேலே