மனவலி
என் மனவலி என்னை வாட்டுகிறது
உடல் வலிக்கு மருந்துண்டு ஆனால்
மனவலிக்கு என்ன மருந்துண்டு?
எனக்கு காதல் தோல்வி இல்லை
கடன் தொல்லை இல்லை
பணம் கஷ்டம் இல்லை
பதவி ஆசை இல்லை
சுற்றம் உறவு இல்லை
தனிமை என்னை கொல்கிறது
யாரிடம் போய் சொல்வது
என் தனிமைக்கு நீ தான் காரணம்.
என் உறவுகளை பறித்தவன் என் கனவுகளை கலைத்தவன்
நீ தான் என் விரோதி இறைவா !
என் மனவலி உனக்கு புரியுமா?
என்னக்கு ஒரு உதவி புரி
என்னையும் வானுலகிற்கு அனுபிவிடு.
t