காசியில் கருடன் பறப்பதில்லை, கவுளி ஒலிப்பதில்லை ஏன்

இராவண சம்ஹாரம் முடிந்ததும் ராமேஷ்வரம் வந்த ஸ்ரீராமர் சிவபெருமானை பூஜிக்க விரும்பி லிங்கம் ஸ்தாபிக்க நினைத்தார்.

ஹனுமானை அழைத்து காசிக்குப்போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.

காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று எது சுயம்பு லிங்கம் எப்படிக் கண்டு எடுத்து செல்வது என்று தடுமாறினார்!

அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டார்!
அதுதான் சுயம்புலிங்கம் என்று கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.

அதை ஆமோதிப்பது போல் பல்லி சத்தமிட்டு ஆதரித்தது.
அந்த சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.
அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கவுளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று ஹனுமன் கூறினார்!

என் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியே நீ இனி காசியில் ஒலிக்கக் கூடாது!
ஏ கருடா!

நீ காசியில் பறக்கக் கூடாது என்று காலபைரவர் சாபம் இட்டார்!

எனவே இப்போதும் கருடன் காசியில் பறப்பதில்லை!
கவுளி சப்தமிடுவதில்லை இந்த அதிசயம் இன்றும் காசியின் அதிசயம்!

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (20-Nov-15, 12:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 164

மேலே