Mudumai
இளமையில் இருக்க நினைக்கும் மானிடா!!
முதுமைக்குள் புகு..
முற்றிலும் இன்பம்
முதுமையில் தான்...
தலையில் என்ன வெள்ளி கோடு?
ஓஹோ நரைகளா?
உன் வாழ்வின் அனுபவ
திரைகள் அவை.
போனது என்னவோ பற்கள்
போக வேண்டியது உன் பயனிலா சொற்கள்
நுரைக்க நுரைக்க ஆசை கொள்
உன் மீசை நரைக்க
அடிக்கண் பார்வை விடுத்து
அகக்கண் பார்வை பார்.
மனிதனோடு பேசுவதை
மாற்றி மரங்களோடு பேசி பழகு.
மனைவியோடு மட்டும் மனம் விட்டு பேசு.
புடவை மடி .
அதில் உள்ள பூக்களை enni உன் பொழுது போக்கி கொள் .
உன் இல்ல தேவதை உடன் உன் இஷ்ட தேவதையை வலம் வா
இது வரை வாழ்க்கை உனக்கு சுமை...
இனிவாழ்கைக்கு நீ சுமை
மரணம் வரவேற்கும்
மானிடனாக மாறு.
முற்றிலும் இன்பம்
முதுமையில் தான்....