பூதங்கள்

நீர்,
நிலம்,
காற்று,
ஆகாயம்,
நெருப்பு - நீங்கள்
அளவோடு வந்தால்
பஞ்சம் மறைகின்றது
அளவின்றித் தந்தால்
பஞ்சம் விரிகின்றது
ஆதலால்தான் நீங்கள்
பஞ்சபூதங்கள்.
இயற்கையை
உங்கள் இச்சைப்படி
இசைக்கும் நாதங்கள்.
ஓர் ஆண்டிற்கு எப்போதும் உண்டு
நான்கு பாகம் - அதில்
வரிசைப்படி உண்டு
உங்கள் வேகம்.
உங்கள் சில நேரத் தீண்டுதலில்
தீதும் உண்டு
உங்கள் பல நேரப் பற்றுதலில்
நன்றும் உண்டு
சுருங்கக்கூறின் - நீவிர்
உங்களை அளித்தால் நன்மை - அதில்
எங்களை அழித்தால் தீமை.
இயற்கையை மனிதன் அழிப்பதால்
இயற்கை மனிதனை அழிப்பதா?
இயற்கையின் இயல்பு உயிர்களை
காப்பதுதான் தவிர தீர்ப்பதல்ல - ஏனெனில்
நீ இயற்கை மட்டுமல்ல
அந்த இறைவனின் கையும் கூட.