அவள்
நானும் என் தோழி காயத்ரியும் இரண்டு வருடத்திற்கு பிறகு சேர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு சென்று கொண்டிருத்தோம். அப்பொழுது நான் அவளிடம் சற்று தயங்கியவாரே "அவன் எப்படி இருக்கிறான்?" என்று கேட்டேன். அதற்கு காயத்ரி "யாரை கேட்கிறாய்?" என்றாள்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தயக்கத்துடன் "குமார்" என்றேன்.அதற்கு அவள், எனக்கு தெரியலடி, யாரிடமாவது கேட்டுச் சொல்லவா? என்று சிரித்தாள். நான் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். கடல் அலை போல் அவன் நினைவலை என் மனதில்.
குமார் என்னுடைய காலேஜ் சீனியர் ப்ரண்ட்.அவன் என்னை துரத்தி துரத்தி காதலித்தான்.முதலில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய காதலை என்னால் உணர முடிந்தது .
அவன் தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் தான், என்னிடம் அவனுடைய காதலை சொல்ல வந்தான்.என் பெயரை சொல்லி "ஒரு நிமிஷம்" என்றான். நான் "ஸாரி" என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன். அவனுடைய கண்களைப் பார்க்கிற சக்தி என்னிடம் இல்லை.
நான் கோயிலுக்கு வரும்போதெல்லாம், எனக்காக அவன் வீட்டு வாசலில் காத்திருப்பான்.சிறிது நாட்களுக்கு பிறகு "ஈமெயில்" மூலமாக காதல் கடிதம் அனுப்பினான். அதற்கு நான் "ஸாரி" என்று பதில் "ஈமெயில் " அனுப்பினேன்.ஆனாலும் இருவரும் நட்பை "ஈமெயிலில்" தொடர்ந்தோம்.
அவன் என் பிறந்த நாளுக்கு கோயிலில் வாழ்த்து சொன்னான். கடைசியாக, அவனிடம் நான் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான்.அதன் பிறகு நான் என் சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். அவன் என்னை மறக்க வேண்டும் என்பதற்காக என் "ஈமெயில்","பேஸ்புக்" என்று அனைத்தையும் "க்லோஸ்" செய்து விட்டேன்.
ஆனால் அவனை இப்பொழுது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவன் வீ ட்டை கடக்கும் பொழுது, அவனது உருவம் நிழலாய், அவனது வீ ட்டு வாசலில் நிற்பது போல் தோன்றியது, ஆனால் அவன் அங்கு இல்லை.
கோயிலை ஒவ்வொரு முறை சுற்றும் பொழுதும், அவனது வீ ட்டை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சென்றேன்.அவன் நினைவுகள் என்னை மின்னலாய் தாக்கியது.
நீ எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், அவன் வரமாட்டான் என்றாள் காயத்ரி.அப்பொழுது அவன் வீட்டில் இருந்து ஒரு பெண் பட்டுப்புடவையில் வெளியே வந்தாள்.
காயத்ரி என்னிடம் "அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!" என்று ஆச்சர்யமாக கேட்டாள். நான் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். செல்லும் வழியில் சிலர் அந்த தெருவில் ஒரு இளைஞன் இறந்து விட்டதாக பேசிக் கொண்டிருத்தார்கள். எனக்குள், அது அவனாக இருக்குமோ என்று பயம் தோன்றியது.
எனக்குள் ஒரு குற்றவுணர்வு. காயத்ரியிடம் பொய் சொல்லி விட்டு கோயிலுக்கு திரும்பவும் வந்தேன். அவனுக்காக கடவுளிடம் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டென். அவன் என் கண் முன்னே நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கண்னை திறந்தேன் . ஆனால் எது எதார்த்மோ அதுதான் நடந்தது, அவன் அங்கு இல்லை.
அந்த பட்டுப்புடவை கட்டிய பெண் யாருடனோ பைக்கில் கோயிலை கடந்து சென்றாள்.ஆனால் வண்டியை ஓட்டியவன் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
அது அவனாக இருக்குமோ என்று தோன்றியது, அதே சமயம் அது அவனாக இருக்காது என்றும் தோன்றியது.
என்னுள் ஏன் அவனை பற்றி இத்தனை குழப்பங்கள்.அவனை நான் ரொம்ப மிஸ் பண்றேன் மட்டும் எனக்கு புரியது. கோயில் வாசலில் என்னை கடந்து யாரோ உள்ளே சென்றார்கள்.திரும்பி பார்க்க சொல்லி ஒரு உள்ளுணர்வு.
இதுவும் எதார்த்தம் தான், அது அவன் தான். என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின.அவன் எனக்காக காத்திருக்கிறான் என்பது புரிந்தது. அவனை பார்த்து வெட்கப்பட்டு திரும்பினேன்.
அவன் என்னிடம், "தீபா ஒரு நிமிஷம்" என்றான். இதுதான் முதன்முறையாக அவன் என்னிடம் பேசியது, இதே இடத்தில்.
இப்பொழுதும் அவனுக்கு அதே பதிலைத்தான் சொன்னேன் "ஸாரி" ஆனால் புன்னகையுடன்...