கரித்துக் கொண்டிருக்கிறது காதல் கடல்.
நீ பூமியும் நான் வானமுமாய் பரபஞ்சம் புள்ளியாய் முடியும்வரை வாழ்வோமென உச்சிமயிர் சிலிர்க்க உரைத்தவள்..
அலங்கார நட்சத்திரமாய் முகப்பருக்களும்,அமாவாசை நிலவாய் சில உண்மைகள் மறைப்பதுமாய் வானமாகவே வாழ்ந்தால் அவள்..
எப்போதோ தெளித்த இன்பமழை நனைந்து, நிதம் தரும் மின்னல் இடி உணர்தேன். இன்றும் இதயஎரிமலையில் அவள் நினைவுத் தணல்..
சொல் தந்த சூட்டில் கருகி நன் முகம்போல் நிறம் மாறியது அவள் நினைவையும் சேர்த்து சுவாசிக்கும் நுரை ஈரல்..
ஜீவநதி பல விழுந்தும், பால்மழை சில நனைந்தும், சில துளி கண்ணீரே கலந்து கரித்துக் கொண்டிருக்கும் என் காதல் கடல்..