கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு

ஓன்று புரிகிறது ஒளி பிறந்தால்
இருள் அகலும்
எமக்குள்ளும் பல இருள்கள்
ஆணவம் கர்வம் அறியாமை
என வரிசை நீள்கிறது
நெஞ்சில் அருள் வர
தீபத்தை ஏற்றி அதை
அருட்பெரும் சோதியாய்
கற்பனை கடந்த சோதியாய்
பரஞ் சோதியாய்
வணங்கி இருள் அகற்றுவோம்
விளக்கிடுவோம் வீட்டில்
வணங்குவோம் நம்
நெஞ்சத்தின் இருள் அகல.
பொன் அருள் - 22/11/2015.

எழுதியவர் : பொன் அருள் (23-Nov-15, 5:07 am)
பார்வை : 173

மேலே