மழை என்பது நனைதல்
மழை என்பது நனைதல்….
~~~~~~~~~~,,~~~~~~~~~~~~~
துப்பட்டாவில்
மழை சேர்க்கிறாள்...
விரும்பிப் பெய்கிறது
அம்மழை.
*************
மழை
தரையில் விழுவதற்குள்
நனைந்துவிட வேண்டும்
பிறகு அது தண்ணீர்
***************************
என் விரல்களுக்குள்
வேறு ஐந்து விரல் சேர்த்து
நனைந்ததில்...
குளிரில்லை.
*****************
பெரு மழைதான்
முதல் துளியிலிருந்து
நனைந்தால்….
********************
போ…. போ
மழை அருந்தியபின் வா,
என் மனம் அருந்த….
****************************