சிதிக் ஷா

சித்திரையின் முத்திரையே
சின்னப்பொண்ணு சிதிக் ஷா..
ஆனந்தி பெத்த
ஆனந்தமே
அண்ணன் பொண்ணு சிதிக் ஷா..

ஒத்தப்பல்லா பார்த்தது
பத்துப்பல்லு தாண்டி போயும்
சித்தப்பனுக்கு பொழுதில்லையே
உனக்காக ஒரு கவி பாட...

பால் மனம் வீசும்,
தாள் திசை தாவும்,
தங்க மகளே..
நிலத்தில் தவழும்
நிலவே,
நிஜமாய் உலவும்
கனவே,
ஆலமர விழுதே,
குலம்,
ஆள பிறந்த
மகளே..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (23-Nov-15, 4:50 pm)
பார்வை : 79

மேலே