கோப மழை

பெய்கின்ற மழைக்கு தன் மடி
விரித்து வரவேற்கின்றது ஏரிகள்
கருப்பை இல்லாது இடம் எல்லாம்
கண்ணீர் சிந்துகின்றது வடிகால்
கட்டும் மருத்துவர்களின் நியாபகம்
மறதி அதிகம் ஆனதால்!!

கடல் நீரை குடிநீராக்க தேவை இல்லை
விழுகின்ற மழையை சேர்க்கின்ற
நல் ஏரி இருந்தால் போதும்!!

ஏரிகள் எல்லாம் மாடிகள்
ஆனதால் அறைகள் எல்லாம்
தண்ணீர் நிரம்பிய பைகலானது!!

நீ இருக்க இடம் வேண்டி
பூமித்தாயின் கருப்பையை
அழித்து கட்டிடமாக்கினாய்
கோபம் கொண்ட மழை பிள்ளை
இப்போது உன்னை அழிக்க
பூமித்தாயை பற்றிக்கொண்டது!!

முச்சு முட்டும் முன் விழித்துக்கொள்
நல் ஏரி குளங்களை இனியாவது
அழிக்காது காத்துக்கொள்!!

எழுதியவர் : தினேஷ்குமார் erodu (23-Nov-15, 12:19 pm)
Tanglish : kopa mazhai
பார்வை : 255

மேலே