வானப் பெண்ணுக்கு இன்று வளைகாப்பு

வானப் பெண்ணுக்கு
இன்று வளைகாப்பு
வானவில் வளை அணிந்து
ஏழு நிறங்களில் சிரிக்கின்றாள் !
முகில் கருவுற்று நிற்கின்றாள்
மழை மழலையைப் பெற்றெடுத்து
தவழ விடுவாள் பூமியில் இப்போது
நமக்காக !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-15, 7:34 pm)
பார்வை : 167

மேலே