ஆண் பெண் ஈர்ப்பு

ஆண் பெண் ஈர்ப்பு என்பது எல்லா வயதிலும் இருக்கும். அது வெளிப்படும் விதம் தான் வேறு வேறு. ஒரு ஆணுக்கு பெண்ணுடன் பேசுவது என்ன சந்தோஷம் தருமோ அதே சந்தோஷம் பெண்ணுக்கும் உண்டு.

ஆனால் ஒரு ஆண் எனக்கு பெண்களுடன் பேச பிடிக்கும் என்று வெளிப்படையாக சொல்லுவது போல பெண் சொல்ல முடிவதில்லை எந்த வயதிலும். அப்படி ஒரு பெண் சொன்னால் அவளை இந்த சமூகம் பார்க்கும் பார்வை வேறு. அதனால் ஏதோ ஒரு உறவு போர்வைக்குள் நுழைந்து தான் பேச முற்படுகிறாள்.

சாதாராண நட்பு உரையாடலை கூட திருட்டுத்தனமாக பெண்கள் செய்ய சில தன்னம்பிக்கையற்ற ஆண்களும் காரணம்.

பிறரை ஏமாற்ற பெண் போடும் உறவு வேஷத்தில் ஏமாறுவது பெண்ணே. எனக்கு அவனுடன்/ அவளுடன் பேச பிடித்திருக்கிறது பேசுகிறேன். பழகி பிடிக்கவில்லையா விலகுகிறேன் என்று வெளிப்படையாக பேசி பழக இருபாலருமே முன்வருவதில்லை.

மனமுதிர்ச்சியையும், தன் தேவை என்ன, என்ன மாதிரி நட்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எவர்களுடன் நம்மால் பயணிக்க முடியும், எவருடன் என்ன பகிரலாம், தன் எல்லை என்ன, தன்னை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற தன்மையை வயதோ, வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் என்பது மட்டுமே தந்துவிடாது.

தவறுகள் செய்திருக்கிறேன். செய்கிறேன் செய்வேன். ஆனால் எந்த இடத்திலும் என்னை நேர்படுத்தி கொள்ள முடியும். அனுபவத்தை பாடமாக வைத்துகொள்ளவும் தேவையில்லையென்றால் தூக்கி எறியவும் தயங்காத மன உறுதி போதும்.

தவறான மனிதர்களை தேர்வுசெய்திருக்கிறேன். ஆண் பெண் இருபாலரிடமும் என் நம்பிக்கை பொய்த்திருக்கிறது. நம்பியது என் தவறு.

நான் இருபாலரில் நிறைய பேருடன் நட்பில் இருக்கிறேன். தவறான மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். மிக அருமையான நண்பர்களையும் பெற்றிருக்கிறேன். இதிலும் ஆண் பெண் பாரபட்சமில்லை

ஆண்கள் எல்லோரும் காமந்தக்காரர்கள் இல்லை பெண்கள் எல்லாரும் காமமற்றவர்களும் இல்லை.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (23-Nov-15, 10:44 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : an pen eerppu
பார்வை : 500

மேலே