காதல் மழை பொழியட்டும்
சிக்கிய கூந்தலானது
என் மனது..
சிக்கெடுக்க உன் உதவி தேவை..
நீ சீப்பாக மாறி
எனை வாறு...
நறுமண எண்ணையாய் கூட
கொஞ்சம் மாறு...
சிக்கின் தீர்வு
காதலாகட்டும்...
சிக்காத உன் இதயம்
சிக்கிக்கொள்ளட்டும்...
சிக்கலில்லா வாழ்வு மட்டும்
நமை அடையட்டும்...
சீக்கிரமாய் வடகிழக்கு பருவமழையாய்
காதல் மழை பொழியட்டும்....