இழந்ததும் நிகழ்ந்ததும்

ஒரு ஊர்ல.... ன்னு
ஆரம்பித்து....
நாளைக்குக்காலைல
ஊசிப்போயிரும் கண்ணு .. என
முன்னிரவில்
வடை ஊட்டிவிட்ட அப்பாவையும்..
தூக்கம் வருதுப்பான்னு
தோளில் வழிந்தபடியே
மென்று விழுங்கியிருந்த
என்னையையும்
கதையாகச்சொல்லிவிட
ஆசைதான்...!!
சராசரிக்குச்சற்றே
பெரியதான வீட்டில்
தனியறை தூங்கும் மகளின்
பிரைவசிக்குப்
பங்கமிழைக்காது...
மெல்லமாய்க்
கதவுதட்டி... ப்ரிட்ஜ்க்குள்
இரண்டு சாக்லேட்டுகள்
வைத்திருப்பதாய்ச் சொல்லி
நகர்ந்துவிட்டதைத்
தவிர...
வேறெந்த அற்புதங்களையும்
நிகழ்த்த முடியவில்லை....!!