சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் விரல் மோதிரம்
என் விரல் அனிந்து
உன் ஸ்பரிசம் உணர்கிறேன்...
நீ அமர்ந்து..
எழுந்த இருக்கையில்..
நான் அமர்ந்து..
உன் தேகவெப்பத்தில்
குளிர்காய்கிறேன்..
உன் கையெழுத்து
பதிந்த காகிதமெல்லாம்
காதல் கடிதமென
சேகரிக்கின்றேன்...
நீ சென்ற
பாதையெல்லாம்
பின் சென்று
உன் பாதச்சுவட்டினில்
என் பாதங்களை
பதிக்கிறேன்...
ஊனும்,உயிரும்
ஒன்றாய் இயங்கும்
கணத்திலேயே..
என் மனம் திறக்க
வழிகொடு
தலைவா,நீ
என் வேதனைக்கெல்லாம்
விடைகொடு