இன்னும் ஒரு

ஒரு
மழைக்காலத்தை
அறிவிப்பது போல்
உன் நினைவுகளின் மதகு
பெருகி அடங்குகிறது
என்
வெயில் பிரதேசங்களில்

ஒரே ஒரு பகல் வேளை
ஆயிரத்திற்கும் அதிகமான
நாட்களாய்
சலிப்பை முகர்ந்து
அதிகாலையிலேயே
கசக்கி எறியப் படுகிறது

அந்திப் பெருவானத்தை
இடிந்து விடாமல்
பாதுகாக்கட்டும் நம் பிரிவு
உடல் விசையின்
ஒவ்வொரு புலர்தலும்
கடலின் கருவறையை தொட்டு
கருக்கொள்ளும் ஒருநாள்

இறந்த கால எச்சங்கள்
இறக்காமல் தளிர் கொள்ள
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
பருத்து பருவமெய்த - இன்னும்
ஊட்டங்களை பொதித்து வைத்து
இன்னும் ஒரு புலர்தலுக்காக
காத்திருக்கிறது

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (29-Nov-15, 4:42 am)
Tanglish : innum oru
பார்வை : 258

மேலே