கள்வனின் காதலிகள்
கடல் கொண்டதாம் காதல் நிலவிடம்
நீளத்திரையில் எத்தனை எத்தனை முத்தங்கள் முத்துக்களாய்
தூரத்தில் இருக்கும் காதலியிடம் நீ கண் சிமிட்டும் இந்த அலைகளில் தான்
காதலர்கள் காதல் கற்று கொள்கிறார்கள் கடற்கரையில்..
ஏரி, குலங்களின் கள்ளகாதலாம் உன் உப்புச்சுவை..!
சுவையை தித்திக்க செய்யத்தான் போராடுகிறாள் முதல் காதலி நிலா!
தன்னை கரைத்து மலை துளிகளாய் கலக்கிறாள் கடலுடன்!!
பூமி உன் மேல் கொண்ட காதலாம் எத்தனை எத்தனை பிள்ளைகள் கடலின் உள்ளே!!
வானம் கொண்ட காதலின் பிம்பமோ உன் நீல நிறம்!
இத்தனை காதலிகளை கொண்ட உன்மேல் பொறாமை தானோ
மனிதர்கள் கடற்கரையில் குப்பை, கூளங்களை கொட்ட வைக்கிறது!
@ அம்முவாகிய நான்@