குடி
ஆங்கிலேயன் நம் நாட்டில்
விட்டு சென்றது
இதை தான்
அன்று
மகிழ்ச்சிக்காக அதன் தீமை
அறியாமல் பயன்படுத்தினான்
இன்று
துன்பங்கள் தெரிந்தும்
சில நிமிட இன்பங்களை
அனுபவிக்கிறான்
படித்தவனும் மூடனாகி போனான்
குடி குடியை கெடுக்கும்
என்ற வரிகளை அறிந்தும்
அதன் உண்மை புரிந்தும்
குடிக்கிறான்
புகைத்தல் கேடு என்பதை
அறிந்தும்
புகைக்கிறான்
அடுத்தவர் அதனால் அடைந்த
இன்னல்களை அறிந்தும்
குடிக்கிறான் ,புகைக்கிறான்
உங்களின் இன்பத்திற்காக
எத்தனை உயிர்களை
துன்பபடுத்துவீர்கள்
உங்கள் கவலைகளை
மறக்க
மகிழ்ச்சியை கொண்டாட
வேறு வழிகள் இல்லையா என்ன?
ஏன் இந்த எண்ணம்
நீங்களும் கெட்டு
மற்றவர்களையும் கெடுக்கும்
இந்த பழக்கத்தை
இனியாவது
மறப்பீர்கள?
உங்கள் வீடும்
நம் நாடும் முன்னேற.......