எனக்கு எல்லாமே என் அம்மாதான்
பத்து மாதமாக என்னை வயிற்றில் சுமந்து வலியையும் சுகமாய் ஏற்றவள்,
நான் பிறக்கும் வரை கருவறையில் நான் நினைப்பதை தானாக உணர்ந்தவள் ,
கருவறையில் நான் மௌன விரதம் இருந்தபோது என் மௌனத்தை கலைக்க என்னிடம் விடாது பேசியவள்,
நான் கருப்பாக பிறந்தாலும் தங்கமே வைரமே என்று என்னை பேரழகனாக பாவித்தவள்,
நான் அம்மா என்றொரு வார்த்தையை முதலில் உதிர்த்த போது மூவுலகையும் வெற்றி கொண்ட ஆனந்தம் அடைந்தவள் ,
நான் நடை பழகும்போது தன் நெஞ்சில் நடக்க விட்டவள்,
நான் செய்யும் குறும்புகளில் இருந்து தினந்தோறும் என்னை தந்தையிடம் காப்பற்றுபவள் ,
ஊரே என்னை என்னை இகழ்ந்தாலும் என் மகன் உத்தமன் தான் என்று அவர்களை எதிர்த்து பேசுபவள்,
எனக்கு என்னை வேண்டுமென்று நான் சொல்லாமலே அறிபவள் ,
அம்மா உன்னை கடவுளென்று கூறமாட்டேன்,
ஏனென்றால் கடவுள் கூட சில சமயம் ஏமாற்றிவிடுவார் .....
உறவினர் எல்லாரும் கூறினர்,
நீ வெளிநாடு வேலைக்கு சென்றால் எல்லாம் உனக்கு கிடைக்கும் என்று,
எனக்கு எல்லாமே என் அம்மா தான் அவள விட்டுட்டு நான் எங்க போவேன்.