ஊரெல்லாம் பாயுதடா மழையால வெள்ளம்

ஊரெல்லாம் பாயுதடா மழையால வெள்ளம் !
(பி. எம். கமால், கடையநல்லூர் )


ஊரெல்லாம் பாயுதடா மழையால வெள்ளம் !
உருவாகிப் போச்சுதடா ரோடெல்லாம் பள்ளம் !
ஒப்பந்தக் காரனெல்லாம் ஓடி ஒளிஞ்சு போக
உடைப்பெடுத்த தண்ணீரில் மக்களெல்லாம் சாக (ஊரெல்லாம் )

ஏரிகுளம் வயக்காடு ஏழடுக்கு வீடாச்சு !
சேரிஎலாம் மழைவெள்ளம் சேர்ந்து நீர் காடாச்சு !
கையூட்டுப் பெற்றதெல்லாம் கனமழையால் தெரிஞ்சாச்சு!
கத்தரிக்கா முத்தியதால் கடவெளிக்கு வந்தாச்சு (ஊரெல்லாம்)

தலைநகர் சென்னை இன்று தல முழுகிப் போச்சுதடா !
வலவிரிச்ச மழை நீரில் வாழ்க்கைபா ழாச்சுதடா !
சோத்துக்கு கையேந்தும் சோகம் வந்து சேர்ந்ததடா !
ஆத்தூராய் சேத்தூராய் ஆகிச் சென்னை போச்சுதடா ! (ஊரெல்லாம்)

திட்டமிடல் இல்லாமல் திணறுதடா நாடு !
குட்டக் குட்டக் குனிவதுவா தமிழனவன் பாடு ?
துட்டு வாங்கி ஓட்டுப் போட்டா த்தொடரும் இந்தக்கேடு !
தூ ! தமிழா ! இனியேனும் துடித்தெழுந்து பாடு ! (ஊரெல்லாம்)

எழுதியவர் : பி. எம். கமால், கடையநல்லூர் (2-Dec-15, 12:14 pm)
பார்வை : 57

மேலே