என்னவள்
காகிதத்தில்
என்
காதலை
கவிதையாய்
எழுத தெரிந்த எனக்கு...!!!
உன்
கண்களைப்
பார்த்து
என்
காதலைச் சொல்ல
தைரியமில்லை பெண்ணே...!!!
.....*****.......*****.......*****.......****.......
என் காதலும்
சிறு குழந்தைதான்
உன்
பிரிவை
தாங்காமல் அழுகின்றது....
கவிதைகளாக..!!!
.....*****.......*****.......*****.......****.......
பெண்ணே...
உன்னாலே...
காயம்பட்ட என் இதயம்
உனையென்னி
கண்ணீர் வடிக்காமல்...
உனையென்னி
கவிதை வரைகிறது...
ஏனோ தெரியவில்லை...!
.....*****.......*****.......*****.......****.......
என் பேனாவின்
கூர்மையைக் கொண்டு
கவிதையில்
உன் விழியின்
கூர்மையுடன் போட்டியிட்டேன்...!
என் பேனா தோற்றுபோனது...!!!
உன் விழியின்
பார்வையில் வீழ்த்திவிட்டாய்...!!!
.....*****.......*****.......*****.......****.......
முதலில் அவளிடம்
என் காதலைச் சொல்ல
கவிதை எழுதத்தொடங்கினேன்...!
பின்னர் கவிதையை
என் காதலி ஆக்கிக்கொண்டேன்...!
.....*****.......*****.......*****.......****.......
இவன்
பிரகாஷ்