இரக்கம் காட்டு தாயே
கருவறைக்குள் நீரில்
நீந்திய குழந்தை இன்று
இந்த உலகத்தில் ஜனித்த பிறகும்
நீரில் நீந்த வேண்டிய அவலம்...
அன்று தொப்புள் கொடி வழியே
கவலையில்லாத உணவு...
இன்று தாய்க்கே
உணவில்லாமல் உறக்கமில்லாமல்
மொட்டை மாடியில்...
தலையில் கூடை வைத்து
தண்ணீரில் நீச்சலடித்து
குழந்தை சுமக்கும் நிலையில்
இன்னும் இயற்கை அன்னை
நம் மீது கருணை காட்ட மறந்து
சீற்றத்துடன் இருக்கவேண்டுமென்றால்
நாம் அவளை எந்த அளவிற்கு சீண்டி இருப்போம்??
தாயே நீ கொதித்து எழுந்து எங்களை
இன்னும் என்ன செய்யப் போகிறாய்??
தாங்க முடியவில்லை அம்மா எங்களால்....
இரக்கம் காட்டு.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
