தமிழரின் மண்ணின் மாண்பு ---- முற்றுமுடுகு வெண்பா

தந்திந்த மண்ணிந்த எங்கெங்கு மும்முந்த
வந்திந்த அங்கங்கு நன்றிந்த --- நம்மென்று
முந்திந்த ஒன்றுன்று முண்டிங்கு வென்றிங்கு
வந்திங்கு நின்றிங்கு வந்து .


பொருள் :-

நமது தமிழரின் மண்ணின் மாண்பு எந்த இடம் சென்றாலும் முந்தி நிற்கும் . அப்படிப்பட்ட மண்ணின் மைந்தராய் நாம் பிறந்துள்ளதற்கு சென்றவிடமெல்லாம் நன்றி சொல்லுதல் வேண்டும் . இதனை நாம் அனைவரும் ஒருசேர பறை சாற்றுவதுப் போல தமிழர் வெற்றியினை நிலைநாட்டி வந்துள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை .


தந்தந்த --- சந்தம் எல்லா அடிகளிலும் பயின்று வந்துள்ளது .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-15, 12:50 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 163

மேலே