புதையல் தேடும் பூமி

புதையல் தேடும் பூமி இது
புன்னகை இழந்தே அலைகிறது!
பூக்கள் கூட சிரிக்கிறது;
மனங்கள் ஏனோ அழுகிறது?

வாடிய முகங்கள் காண்கையிலே;
தேடிய சுகங்கள் வெறுக்கிறது!

ஆடி , ஓடி அலைகையிலே,
அற்புத வாழ்வு தொலைகிறதே!
உறவை எழந்து தணித்திடவே
பிணமாய் மண்ணில் வாழ்ந்திடவோ?

அன்பு , காதல், பாசம் அற்று;
இன்ப வாழ்வை நாளும் விற்று;
எதையோ தேடி ஓடுகிறாய்!
கண்கள் கலங்கி வாடுகிறாய்!!

சிறு பிள்ளை சிரிப்பு எங்கே?
பேசி களிக்கும் நட்பு எங்கே?
தன்னிலை மறக்கும் தூக்கம் எங்கே?
பாரம் தாங்கும் தோள்கள் எங்கே?

செல்வம் தேடும் நீயும் இங்கே..
பிணமாய் முடிவில் போவது எங்கே!!??

எழுதியவர் : நேதாஜி (9-Dec-15, 9:53 pm)
பார்வை : 102

மேலே