மாத்தீட்டீங்களடா
ஏரியாக இருந்த என்னை அவன், ஏரியாவாக மாற்றிவிட்டான்
நீர் நிறைந்த என்னில் இப்பொழுது, கார் நிறைந்திருக்கிறது
நாவாய் சென்ற என்மேல் இப்பொழுது, கால்வாய் செல்கிறது
என்னுள் இருந்த உறவு களை அழித்து விட்டு
அவன் உடைய உறவு களை வளர்த்து விட்டான்.
உயிர்வரும் நேரம் தேடி அலைகிறது என்னைத் தெருத்தெருவாய்
மூடி விட்ட என்னில் முளைத்திருக்கிறது மூன்றடுக்கு மாடி
நினைத்து விட்டானோ ? உயிர் அவனுக்கு மட்டும்தான் உன்டென்று
என்னை மூடிவிட்டு அவன் நட்டான் விளம்பரப் பலகை!
நான் கேட்கிறேன், அவனிடம் ஏரிக்கு ஏனடா விளம்பரம்?
ஆராய்ந்து பார்க் காமல் வாங்கி விட்டான் என்னை!
பார்த்தி ருந்தால் தோண்டி இருக்க மாட்டான் மண்ணை!
தெரியாது பலருக்கு தாம் இருப்பது இடுகாட்டின் மேலென்று
அவன் வீட்டின் எல்லைக்கல் என் உயிர்களின் கல்லறைக்கல்
என் வீட்டை அழித்துவிட்டு அவன் வீட்டில் குடியேறிவிட்டான்.
சரிந்து விடும் ஒரு நாள் உன் பொய் மாளிகை
கலைந்து விடும் ஒரு நாள் கனவுக் கோட்டை
அவன் தன் (ரியல் எஸ்டேட்) நிலை தனை மாற்ற வேண்டி
உன் நிலையை முழுவது மாக மாற்றி விடுவான்
ஏமாறி விடாதே!! மாந்தா ஏமாறி விடாதே!!