விடைசொல்

விடைசொல் பெண்ணே
பறிக்கப்பட்ட என் மலர்களுக்கு
மட்டுமல்ல ?
மறக்கப்பட்ட உன் காதலனுக்கும்தான்

நீ சூடிய மலர்களில்
எனக்கு காயங்கள் இழைக்கப்பட்டது
இன்று உன்னால் உன் காதலனுக்கும்
காயங்கள் பரிசளிக்கப்பட்டது

விடைசொல் பெண்ணே
ஏற்ப்பட்ட ரணங்கள் குறைய
ஒரே ஒரு விடைசொல்

காயங்களுக்கு மறுத்ததாகவேனும்
இருவருக்கும் ஏற்புடையதாய்
ஒரு விடைசொல்..

இப்படிக்கு ரோஜா செடி

எழுதியவர் : இளங்கோவன் (12-Dec-15, 4:02 pm)
பார்வை : 212

மேலே