எங்கிருந்தாலும் மல்லிகை மனம் மாறாது மாற்றவும் முடியாது

கல்யாணம் முடிந்து சென்ற தங்களது பெண்ணை மாமியார் வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை காண பெண்ணின் தாய் தந்தையர் பெண்ணை காண சென்றனர் அப்போது ...
பெண் : வாங்கப்பா வாங்கம்மா எப்படீருக்கீங்க ..

தந்தை : நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்கம்மா

பெண் : எனக்கு என்னப்பா அவரு நல்லா பாத்துக்குராறு ஒரு பிரச்சனையும் இல்லை..
நீ எப்படிம்மா இருக்க

தாய் : நல்லதாம்மா இருக்கோம் ஆமாம் சம்மந்தி அம்மா எங்க

பெண் : அது வந்து............... இருங்கம்மா நாம் போய் எதாவது குடிக்க கொண்டு வர்ரேன் ....
தந்தை :சரிம்மா ...

சிறிது நேரம் கழித்து .............

பெண் : இந்தாங்கம்மா coffee ...சூடா இருக்கும் மெதுவா குடிங்க ....

தாய் : பாத்தீங்களா எவ்வளவு பொறுப்பா இருக்கா எம் பொண்ணு ...

தந்தை ; நம்ம பொண்ணுன்னு சொல்லுடி

தாய் ; சரி நம்ம பொண்ணு ஆமாம் மாப்பிள்ளை எங்கம்மா ?

பெண் : இன்னைக்கு sunday அதனால அவங்க அம்மாவ பார்க்க போயிருப்பாரு ...

தந்தை ; அப்போ சம்மந்தி இங்க இல்லையா ?

பெண் : இல்லப்பா அவங்களுக்கு ரொம்ப வயசுஆயிடுச்சி அதனால என்னால அவங்கள சரியா பார்க்க முடியல அதனால தான் அவங்கள முதியோர் இல்லத்துல போய் சேத்து விட்டுட்டோம் ..போன வாரம் நான் போயிருந்தேன் பார்க்க ....எனக்கு அந்த இடமே பிடிக்கல அதனால தான் நான் இந்த வாரம் போகல ...

தந்தை : எங்க சேத்துவிட்டீங்க ?

பெண் : சென்னைக்கு பக்கத்துல அநாதை மற்றும் முதியோர் இல்லம்ப்பா ஏன் உங்களுக்கு தெரியுமா ?

தாய் : ஏம்மா அவங்க இங்க இருந்த உனக்கு என்ன கஷ்ட்டம்

பெண் : அவங்களோட எல்லா வேலையும் செய்ய ஒரு வேலைக்காரியை வேலைக்கு வைத்தோம் வேலைக்காரியாலேயே செய்ய முடியவில்ல நான் எப்படிம்மா செய்றது ?

(பெண்ணின் தாய் 6 மாதம் முன்பு பெண்பார்க்க வந்த அவர்களது சம்மந்தி அவர்களிடம் பேசியதை சட்டென்று நினைத்து பார்த்தார் )

தாய் : வணக்கம் சம்மந்தி என்மகளுக்கு கூட இதுவரை நாங்கள் சொல்லவில்லை உங்களிடம் சொல்கிறோம் ஏன் என்றால் இனிமேல் அவளுக்கு தாய் தந்தை எல்லாமே இனிமே நீங்கதான் (சம்மந்தி கணவர் முன்பே இறந்து விட்டார் அதனால் பெண் பார்க்க மாப்பில்லைஇன் தாயார் மற்றும் மாப்பிள்ளை வந்திருந்தனர் ) எங்களுக்கு கல்யாணம் முடிந்து 5 வருடமாக குழந்தை கிடையாது 5 வருடம் கழித்து நான் கருவுற்றேன் ஆனால் அந்த குழந்தையும் operation செய்யும் போது இறந்துவிட்டது பின்பு டாக்டர் எங்களிடம் உங்களுக்கு இனி குழந்தை பிறப்பது கடினம் என்றும் அதற்க்கு காரணம் என்னுடைய கருப்பை பலகீனம் ஆனதால் அதை operation செய்யும் போதே எடுக்க வேண்டிய கட்டாயம் ஆனதாலும் என்று சொல்லிவிட்டார் அப்போது எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் மருத்துவமனையில் இருந்து மிகவும் துக்கத்தோடு காரில் வந்து கொண்டிருந்த போது ஒருஇடத்தில் எங்கள் கார் திடீரென நின்றது பின்பு எங்கள் driver இறங்கி சென்று பார்த்த போது engine பிரச்சனையை காரணமாக வண்டி நின்றுவிட்டது என்று சொன்னார் அப்போது என் கணவர் அருகில் இருந்த கடையில் சென்று குடிக்க எதாவது வாங்கிவருகிறேன் என்று சொன்னார் பின்பு சிறிது நேரம் கழித்து எனக்கு குடிக்க தண்ணீர் வாங்கிவந்தவர்

கணவர் : இந்தா இந்த தண்ணிய குடி ஏம்மா இப்ப எப்படி இருக்கு உடம்பு வலி?

மனைவி ; இல்லங்க நான் நன்றாக இருக்கிறன்

கணவர் : கார் சரி ஆனதும் நாம இப்போ ஒரு இடத்துக்கு போயிட்டு வீட்டுக்கு போவோமா

மனைவி : எங்கங்க

கணவர் : நீ என்கூட வா போனதுக்கு அப்புறம் உனக்கே தெரியும்

கார் சரியான பிறகு அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் கார் ஒரு அன்னத்தை இல்லத்தில் நுழைந்ததை மனைவி கண்டார்

மனைவி : எதுக்குங்க அநாதை இல்லத்துக்கு வந்தீங்க

கணவர் : இல்லம்மா நான் அந்த கடைல தன்னிவாங்கும் போது இந்த அநாதை இல்லத்தோட எழுத்து பலகையை பார்த்தேன் " நமக்கு குழந்தை இனி பிறக்காது என்பதும் கார் சரியாக இந்த இடத்தில் repair ஆனதும் நான் இந்த அநாதை இல்லத்தின் பலகையை கண்டதும் எனக்கு தோன்றியது கடவுள் நமக்கு இங்கிருக்கும் ஒரு குழந்தையை வளர்க்கும் வரத்தை கொடுத்திருக்கிறாரோ என்று ஒரு எண்ணம் தோன்றியது அது உண்மையா இல்லை நானாக நினைத்திருப்பதா என்பது எனக்கு தெரியாது இருந்தாலும் இதனுள் சென்று பார்ப்போம் ஒருவேளை நம் இருவருக்கும் பிடித்த இதயம் இங்கு இருந்தால் நாம் ஏன் அந்த இதயத்தை நம்முடைய குழந்தையாக நினைக்க கூடாது நம்முடம் அழைத்து சொல்ல கூடாது ?

மனைவி: புண் சிரிப்போடு வாங்க போகலாம் என்று காரில் இருந்து இறங்கினார்

இருவரும் சென்று மேலதிகாரியை பார்த்து தங்களின் எண்ணத்தை கூற மேலதிகாரி மிக மகிழ்ச்சியுடன் அவர் அவர்களை குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர் அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையை மிகவும் பிடித்திருதது அதை அவர்கள் மேலதிகாரி அவர்களிடம் சொல்ல அவர் அந்த குழந்தையை முறைப்படி எங்களுடன் அனுப்பி வைத்தார் அவள் தான் என்று நீங்கள் பார்க்க வந்த எங்கள் பெண் என்றார் சம்மந்தி அவர்களிடம்

சம்மந்தி : கவலை படாதீங்க அவளை நீங்க இவ்வளவு நாள் எப்படி பாத்து கொண்டீர்களோ அதைவிட அதிகமாக அவளை பார்த்து கொள்கிறேன் என்றார் ....

காபி சூடு குறைந்துவிட்டது என்ன யோசித்து கொன்றிருக்கிறீர்கள் என்று பெண் அம்மாவின் உடலை தொட 22 வருடம் முன்பு தானும் சம்மந்தியும் பேசியதை நினைத்து பார்த்து விட்டு கணவு கண்டு விழித்ததை போல் தாய் தனது மகளின் முகத்தை பார்த்து கேட்டால் ...

தாய் : நீ இருக்க வேண்டிய இடத்தில் அவர்களை அனுப்பி விட்டாய் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தி நீ இருக்கின்றாய் ...

பெண் : என்னம்மா சொல்றீங்க ...

தாய் : அப்போது தாய் தன மகளிடம் கண்ணீரோடு சொன்னால் உன்னை மகளாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டு கொண்டோம் ஆனால் உன்னிடம் அவர்களுக்கு நீ மகளாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்ல மறந்து விட்டோம் என்று சொல்லி அவளிடம் சமந்தி அவர்களிடம் கல்யாணத்திற்கு முன்பு சொன்னதை சொன்னால்

பெண் : நான் அநாதை என்று தெரிந்தும் நான் அவர்களை அநாதை இல்லத்தில் சேர்க்கிறேன் என்று தெரிந்து என்மீது கோபப்படாமல் சென்றார்களே என்று வருத்தப்பட்டு தனது மாமியார் போகும் போது சொன்னதை நினைத்து பார்த்தால் ;

மாமியார் அவளிடம் சொன்னது : என்னை பிரித்துவிட்டு நீ தனி மரம் ஆகிவிட்டாயே மீண்டும் .....

உன் கணவனை பெற்ற தாய் உனக்கும் தாய்தானே .....
உறவுகளை பிரிப்பதால் நீங்கள் தான் அநாதை ஆகிறீர்கள் ...
உறவுகள் இருக்கும் போது உயர பறக்க பல உதவிகள் வரும் ...
உறவுகள் பிரியும் போது மழை இல்லா தனிமரம் ஆகும்............

எழுதியவர் : சாமுவேல் (13-Dec-15, 3:50 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 215

மேலே