பிள்ளைகளிடம் பேசுங்கள்

அவனுக்கு வயது 10 அவன் தந்தை மிகவும் குடிப்பார் தினமும் குடிப்பார் அவனுக்கு அவனுடைய அப்பா என்றால் மிகவும் பயம் அதனால் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வர மாட்டான் நேரடியாக விளையாட சென்றுவிடுவான் 7 மணி ஆனதும் அவனுடைய ஆசிரியர் வீட்டிற்கு சென்று படிக்க ஆரம்பித்துவிடுவான் இரவு 10 மணிவரை. பின்பு வீட்டிற்கு செல்வான் எல்லாம் உறங்கிய பிறகு அவனுக்காக அவன் தாய் மட்டும் தினமும் காத்திருப்பாள் பின்பு அவன் வந்ததும் உணவு கொடுத்து உறங்க வைப்பாள். காலையில் 4 மணிக்கு யாரும் விழிக்கும் முன் எழுந்து படிக்க ஆரம்பிப்பான். அவன் தந்தை அவன் படிப்பதை பார்த்துவிட்டு அவனுக்காக கடைக்கு சென்று தேநீர் வாங்கிவருவார். அவனுடைய அப்பாவிடம் பேச மாட்டான் அவரும் அவனிடத்தில் பேசுவதில்லை.அவனுடைய ஆசிரியருக்கு அவன் மீது மிகுந்த அன்பு காரணம் அவன் படிப்பில் மிகவும் கவனமாக இருப்பது. அவன் ஆசிரியர் அவனுடைய தாயை சந்தித்து பேசுவார் நன்றாக படிக்கிறான் ஆனால் அவனுக்குள் ஏதோ ஒன்று உள்ளது எல்லா மாணவர்களும் படிக்கவில்லை என்று நான் அடிப்பேன் ஆனால் உன் மகன் படிக்கவில்லை என்று ஒருநாள் கூட நான் அடித்தது கிடையாது அதுமட்டும் அல்ல அவன் அழுது நான் பார்த்ததே கிடையாது என்றார் .

இது அவன் தாயை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது அதே நேரத்தில் பயத்தை உண்டாக்கியது காரணம் அவன் பெரிய மனிதர்கள் போல் தானாக செயல் படுவது. ஒருதடவை கூட இதைவாங்கி கொடுங்கள் அதைவாங்கிகொடுங்கள் என்று தாயிடமோ தந்தையிடமோ கேட்டது கிடையாது. அப்படியே நாட்கள் செல்ல ஒருநாள் sunday அவன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான் அப்போது அவன் தாயும் தந்தையும் எங்கோ புறப்பட்டு கொண்டிருப்பதை கண்டான் சிறிது நீரம் கழித்து அவன் தாய் அவனிடம் வந்து நாங்கள் கடைக்கு செல்கிறோம் திரும்பிவர நேரம் ஆகும் நீ உன் ஆசிரியர் வீட்டில் இரு பின்பு 9 மணிபோல் வீட்டிற்கு வா என்றால் சரி அம்மா என்று சொல்லிவிட்டு அவன் விளையாடத்தொடங்கும் போது அவன் தந்தையும் தாயும் நடக்க ஆரம்பித்தார்கள் அவன் என்ன மனதில் நினைத்தானோ சட்டென்று விளையாடுவதை நிறுத்திவிட்டு தன தந்தை செல்வதை கண்டான் அதே நீரம் அவன் தந்தை சிரித்த முகத்தோடு அவனை திரும்பி பார்த்தார் இதுவரை அவனை பார்த்து அவர் சிரித்து அவன் கண்டதில்லை அவனும் தன தந்தை சிரிப்பதை கண்டு மெல்ல சிரிக்க அவன் தந்தை அவர் கையை நீட்டி best of luck என்று கூறுவது போல் கையை காட்டினார் அவனுக்கு அது புரியவில்லை என்றாலும் தன மனதில் சிறிது மகிழ்ச்சியும் கலக்கத்துடன் சிரித்து விட்டு விளையாட துவங்கினான் ......

சிறிதுநேரம் கூட விளையாடாத அவன் சட்டென்று விளையாட்டை நிறுத்திவிட்டு வீட்டின் முன்ப அமர்ந்தான் மெல்ல அவன் கண்கள் மூட ஆரம்பித்தன கண்கள் எப்பொழுதும் இல்லாதது போல் உறக்கத்திற்கு அவனை அழைத்து சென்றது அடுத்தநொடி அவன் கண்கள் மின்னல் வேகத்தில் திறந்தன காரணம் அவன் காதில் யாரோ அலறுவது போல் ஒரு சத்தம் அவன் தெருவில் இருந்த அனைவரும் அவன் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர் அவன் அதை பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க அவனுடைய அடுத்த வீட்டில் உள்ள ஒருவர் ஓடி வந்து அவனிடம் " உன் தந்தைக்கு ரயில் விபத்தாகிவிட்டது என்றார் " அவனுக்கு 10 வயது என்ன செய்வதென்று தெரியவில்லை யாரை சென்று பார்ப்பதென்று தெரியவில்லை கண்கள் இருட்ட மயங்கி தரையில் விழந்தான் ...

மாலை 5 மணி ....

இருக்கும் அவன் கண்கள் அழுகையின் சத்தத்தில் மெல்ல விழித்தன வீட்டில் அதிகமான ஆட்கள் ......அவன் கண்கள் அவன் தாயை தேட ஆரம்பித்தன மெதுவாக அவன் கால்கள் வீட்டின் வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்க மெதுவாக செல்ல வெளியில் அவன் தந்தையின் உடல் வெள்ளை துணியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது அவன் தாய் கண்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியதுபோல் அழுது கொண்டிருக்க அவனை சுற்றி இருந்தவர்களும் அழுது கொண்டிருக்க அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் அவனால் அழ முடியவில்லை அழ வேண்டும் என்று ஒன்று தோன்றவில்லை இதற்க்கு முன் இதுபோல் அவன் எதையும் கண்டதில்லை .....

அவன் தந்தையின் மரணம் அவனை அழு வைக்கவில்லை காரணம் அவனுக்கும் புரியவில்லை சிறிது நாட்கள் கழித்து அவனின் தாயார் அவனை ஒரு விடுதியில் சேர்க்க சென்றார் காரணம் அவன் தாயால் அவன் படிப்பிற்கு பணம் கட்ட இயலாத நிலை அது அவனுக்கும் புரிந்தது அவனும் தன தாய் சொன்னது போல் சரி என்றான். அவனை கொண்டு அந்த விடுதியில் விட்டுவிட்டு அவன் தாயார் வீடு திரும்பினார் . அவனுக்கு அது புது இடம் புது மனிதர்கள் அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை காலையில் மணி ஓசை கேட்டு ஏழு வேண்டும் இருவு 9 மணிக்கெல்லாம் உறங்க செல்ல வேண்டும். மணி அடிக்கும் நேரத்தி உணவு அறந்த வேண்டும் . எந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற நேர அட்டவணையின் முறைப்படி அனைத்தயும் செய்ய வேண்டும். ஒரு நான்கு நாட்கள் கழிந்தது sunday விடுமுறை அனைத்து விடுதி தாய் தந்தையரும் அவர் அவர் பிள்ளைகளை வந்து பார்த்து செல்லும் நாள் கலை 8 மணியில் இருந்தே பெற்றோர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அவன் கண்கள் ஒவ்வொருவரின் பெற்றோர்கள் வருவதும் அவர்களுடன் அவர்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பதையும் கண்டு அவன் மணம் ஏதோ ஒன்று நமக்கு இல்லையே என்ற வருத்தம் மனதிற்குள் எழ அதை அவன் உணர்வதை அவன் இதயம் அவனிடம் சொல்லுவதை அவன் அன்று உணர ஆரம்பித்தான் ...

காலை உணவு மணி அடித்தது உணவு அருந்த சென்றான் உணவு இரங்கவில்லை அவன் எதையோ இழந்தது போல் உணர்ந்தான் உணவை அவன் அருந்தவில்லை பின்பு அதை அப்படியே குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு கைகழுக சென்றான் அப்போது ஏன் சாப்பிடவில்லை மகனே என்ற ஒரு குரல் அவன் காதில் விழுந்தது அவன் இதயம் ஒருநொடி நின்று யார் அந்து குரல் ஏன் இதயத்தை நிறுத்திய அந்த குரல் என்ற நினைத்து அவன் கண்கள் அந்த குரலின் உருவத்தை பார்த்த அடுத்த நொடியே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோட தன் தாயைக்கண்டதும் ஓடிச்சென்று தன் தாயை கட்டி அழ ஆரம்பித்தான் .....

அப்பொழுது அவன் தாயும் அவனோடு சேர்ந்து அழ ஆரம்பித்தால் அப்பொழுதுதான் அவன் தாய்க்கு புரிந்தது அவன் இவ்வளவு நாள் ஏங்கி கிடந்தது தாய் அன்பு ஒன்றுக்கு மட்டும் தான் அதை அவன் அவன் இவ்வளவு நாள் முழமையாக கிடைக்க பெறாமல் இருந்ததால் என்பதுதான் .....

அன்றே அவன் தாய் தன் மகனை தன்னுடன் அழைத்து சென்றால் விடுதியில் இருந்து ....

பிள்ளைகள் அவர்களாக எதுவேண்டுமானாலும் அவர்கள் விருப்பபடி செய்யலாம் ஆனால் அவர்கள் உள்ளம் எதை தேடுகிறது என்பதை அவர்களிடம் பேசினாலே புரியும் ....அதிலும் ஆண் பிள்ளைகள் குடும்பத்தின் சுமைகளை தன் நண்பர்களிடம் சொல்ல தயங்குவார்கள் அவர்கள் உலக அறிவை அடையும் வரை பிள்ளைகளிடம் பேசுங்கள் அது இல்லாது பெற்றவர்களுக்கு மற்ற என்ன பேச்சு ....

எழுதியவர் : சாமுவேல் (14-Dec-15, 9:57 am)
பார்வை : 57
மேலே