இந்தியா 2020

குப்பைகள் இல்லா உலகம் வேண்டும் ...
அதற்கு மக்கள் மனது வைக்க வேண்டும் ...

வேலிக்காத்தான் இல்லா நாடு வேண்டும்
அதற்கு எதிரிகள் வழிவிட வேண்டும் ....
மனிதன் கூட அரியவகை மரங்களை தான்
வெட்டுகிறான் ....
அதற்கு பதில் இதை வெட்டலாமல்லவா ...

பார்த்தீனியம் வேண்டாம் ...
பாலிதீன் வேண்டாம் ...


தாமரை வேண்டும் ....
ஆகாயத்தாமரை வேண்டவே வேண்டாம் ....

விவசாயம் செழிக்க வேண்டும் ....
சாயம் வெளுக்க வேண்டும் ....

இறைவா உன் மனதில் என்னை ஆக்கிரமித்து விடு ...
ஊரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடு ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Dec-15, 6:18 pm)
பார்வை : 250

மேலே