காதல் ரசம்

கண் கட்டி வித்தையெல்லாம் காட்டாதடி
கனிமொழியே என்னைவிட்டு போகாதடி
இனம் புரிய இன்பங்கள்
இதயத்திலே இழையும்
இம்சையுடன் இதயத்தில்
காதல் ரசம் வழியும்
கண்ணசைவு பூகம்பத்தில்
ஆடிப்புட்டேன் ஏகாந்தத்தில்....
கர்வம் உந்தன் கண்ணில் கண்டேன்
சர்வமும் என்னுள் அடங்க கண்டேன்

ஏற்று விளக்கேற்று
என் நெஞ்சில் திரியிட்டு
கண்ணே உன் கண்ணால் தீ மூட்டு..

பூட்டு ஒரு பூட்டு
உன் கண்ணிரண்டில் தான் போட்டு
வெளிச்சமும் கெஞ்சும் ஒய்வு கேட்டு

ஒரு பாட்டு சுதி போட்டு
உன் இதழ் அசைவில் ஒலிபெற்று
வரும்போது வரியெல்லாம்
வாசனையுடன் பூங்காற்று

காற்று தென்றல் காற்று
உனை தீண்ட மறந்திற்று
தென்றலும் தேகம் சுட்டிற்று

பாட்டு ஒரு பாட்டு
எழுதத்தான் உனைப்பார்த்து
எடுத்த வெள்ளைத்தாளும்
என் காதல் சின்னமாயிற்று

இளங்குயிலே இளங்குயிலே
நீ பாடுவதை நிறுத்து
இனியாவது இவள் குரலை
கேட்டு நீ மயங்கு

தன் இதழ் விரிக்க
சின்ன அரும்புக்கும் தாழ்வு மனப்பான்மை
உன் இதழ் விரித்து
நீ சிரித்துவிட்டதால்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (15-Dec-15, 12:45 am)
Tanglish : kaadhal rasam
பார்வை : 561

மேலே