அம்மா

அம்மா—சிறுகதை
”டேய் விஐய், நான் காதலிச்சுதானே கல்யாணம் கட்டிக்கிட்டேன், நிம்மதியே இல்லேடா” நண்பனிடம் விரக்தியாக புலம்பினுான் புஷ்பராஐ்.
போடா, நியும், ஒன் பிரச்னையும், வீட்டுக்கு வீடு அப்படித்தான்டா. பதிலடி கொடுத்தான் விஐய்.
இல்லேடா, தொட்டதுக்கெல்லாம் கோபப்படுறா,
என்னது, தொட்டதுக்கா?
என்னடா, விளையாடிறீயா-ன்னு கேட்டு விட்டு ”அதுக்கும்தான்டா” என்றான் புஷ்பராஐ்.
சரி ஒன் மனைவியிடம் பேசட்டுமா?
வேண்டாம்டா சாமீ… நாலு சுவத்துக்குள்ள இருக்கிறத… சந்தி சிரிக்க வெச்சுட்டியா? அதுக்கும் சண்டை போடுவாடா!
நிம்மியாய் இருக்க வழி சொல்லுடா
சரி…சரி… நீ காதலிக்க என்னவெல்லாம் செய்து அவளை இம்பரஸ் பண்ணே அதைச் சொல்லு என்றான் விஐய்.

அதெல்லாம், நினைச்சா வானத்துல பறக்குற மாதிரி இருக்கும்டா”
அதான்…அதான்… அதையே சொல்லு பார்ப்பொம்.
அவ சொல்ற இடத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாலேயே போய் காத்து கிடப்பேன்.
அப்புறம்….
போகும்போதே…வித்தியாசமாய் ஏதாவது கிப்ட் வாங்கி போவேன்.
அப்புறம்…
என்னடா… கதையா கேட்கிற?
சொன்னாத்தானே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
பார்க்குல ஒக்காந்தா… நேரம் போறதே தெரியாது.. வாட்ச்மேன் வந்து விரட்டினாத்தான் உண்டு. ஒலகத்தையே மறந்து ..போடா.. சொர்க்கத்துல இருக்கிற மாதிரிடா..அது. அது இப்ப கிடைக்காதுடா.

அப்புறம்…
நல்ல ரெஸ்ட்ரெண்டா பார்த்து…அவளுக்கு பிடிச்சதா பார்த்து..பார்த்து காசைப் பத்தி கவலைப்படாம வாங்கி குடுத்து. அவ சாப்பிடற அழகைப் பார்க்கிறதுக்கு ஆயிரம் கண்வேணுன்டா.

அப்புறம்..
அவளை வீட்டுக்கு கொண்டுபோய் விடுகிற வரையில் ”ஒரு பாடிகார்டா” இருந்து பத்திரமாய் அவளை வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்.



அப்பத்தான் வீட்டுக்குள் நுழைவாள்…அடுத்த அரை நிமிடத்தில், ஒரு போன் போட்டு விசாரிப்பேன்.

போடா…இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு..நீதான் காதலிக்கல. அதனால ஒனக்கு தெரியாதுடா என்றான் புஷ்பராஐ்.

அப்படி வா…மாப்ளே! எல்லாமே நீ சொன்னதுதான்.


நான் சொல்றத கவனமா கேளு… முதலாவது, தொட்டதுக்கு கோபப்பட்டாள்.

காதலிக்கும் போது தொடுறதுக்கும், இப்போ தொடுறதுக்கும் வித்தியாசம் இருக்குடா, காதலிக்கும் போது, ஒருவித அச்சத்தோடு, மென்மையா, பட்டும்படாமலும் இருக்கும். இப்போ உரிமை இருக்குங்கறதால, தொடுறதல ஒரு அழுத்தம் இருக்கும். அதான் கோபப்படுறா



இரண்டாவது, வித்தியாசமான கிப்ட் வாங்கி தந்ததாய் சொன்னாய். இப்போது எதுவுமே இல்லாமல் கைவீசிக் கொண்டு போகிறாய். டேய் மல்லிப்பூவும், அல்வாவும் வாங்கி கொடுப்பதைக்கூட நிறுத்தி விட்டாய் போலிருக்குது.
மல்லிப்புவுல, ஒருவித பரவச உணர்வை இருக்குடா. அது தம்பதிகளுக்கிடையே ஒரு நெருக்கத்தை உண்டாக்கும். ஒரு கால்கிலோ அல்வாவில் ஏகப்பட்ட கலோரிகள் கிடைக்கும்-டா. நீ அதுகூட வாங்கி போகமாட்டேன் என்கிறாய்.
ஆபிஸ் முடிஞ்சதும், சீக்கிரம் வாங்க என கூப்பிட்டால், இரவு ஒன்பது மணிக்கு போய் ஆபிஸ்ல எக்கச்சக்க வேலை” என நிற்பாய். வீட்டுக்கு போனதும், ஆபிஸ்ல வேலை செஞ்ச அசதில ஒரு குட்டித்தூக்கம் போடுவே. மனைவிகிட்ட மனசுவிட்டு பேசமா்டடே
வாரத்துல ஏழுநாளும்... வீட்டுச்சாப்பாடுதான். ஒருநாள்கூட வெளியில ரெஸ்ட்ரெண்ட கூட்டீ போய் மனைவிக்கு அசைப்பட்டதை வாங்கி தருவதில்லை..... கேட்டா விக்கிற விலைவாசில கட்டுப்படி ஆகல”ன்னு சொல்றே
.
அவங்க அம்மா வீட்டுக்கோ, இல்லே தோழி வீட்டுக்கோ போனால் துணைக்கு போகாமல் தனியே அனுப்பி, ஒனக்குத்தான் வழிதெரியுமே. நீ போய்ட்டு வாயேன்” என்று அனுப்பி விடுகிறாய்.

…..டேய்...டேய்.....எப்படிடா இது, என் வீட்ல நடக்கறதை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறே. என் மனைவி ஏதாச்சிலும் ஒன்கிட்ட புலம்பினா? கேட்டான் புஷ்பராஐ்.
இது என்ன உலகமகா ரகசியமாக்கும்.. எல்லோரும் செய்யுற தப்புத்தானேடா இது.
முதல்ல நீ சொன்னதுக்கும், இப்ப நான் சொன்னதுக்கு முடிச்சு போட்டு பாரு விடைக் கிடைக்கும்டா என்றான்.
என்னடா புதில் போடுறே ? பதில் சொல்லுடா!
பதிலா ? உன் மனைவி மனதளளவில் இன்னும் காதலியாகவே இருக்காள்டா. அதுதான்டா பிரச்னை.
ஒரு குழந்தை பிறந்த பிறகாவது, காதலிங்கிற நினைப்புல இருந்து மீண்டு வருவாளா? அப்புறம் என்கிட்ட ஒட்டுவாளா? ன்னு கேட்டான் புஷ்பராஐ்.
குழந்தை பிறகு, ஒண்ணை மொத்தமா சீண்டவே மாட்டாடா
டேய்...டேய் என்னடா சொல்றே பதறினான் புஷ்பராஐ்.
அவ, அம்மா-ங்கிற பெரிய அந்தஸ்துக்கு போயிட்டதுக்கு அப்புறம் நீயாவது....காதலாவது......
——- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (15-Dec-15, 5:28 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 336

மேலே