வனம் - சிறுகதை

வனம் - சிறுகதை
மன்னா, நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்து மக்களிடம் கொள்ளடையடித்து போய்விட்டார்கள்.
எங்கிருந்து வந்தார்கள்? கள்வர்கள்.
நம் நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் இருந்துதான்… மன்னா
படைவீரர்கள் காவலுக்கு இல்லையா?...என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
காடோ பெரிது…படைவீரர்கள் சொற்பம், காவல் கடினம்தான், மன்னா!
மந்திரியாரே! உன் யோசனை என்ன?
கொள்ளையர்கள்ள காட்டிற்குள் ஒளிந்து கொள்வதால், காட்டை அழித்து நாடாக்கி விட்டால்…ஒளிவதற்கு இடமிருக்காது…வேறு நாட்டுப்பக்கம் போய்விடுவார்கள்ஈ மன்னா
நல்ல யோசனை..உமக்கு என…முடிப்பதற்குள்
”மன்னா” குரல் புலவரிடமிருந்து வந்தது.
மந்திரியாரின் யோசனைக்கு முன்…என் யோசனை ஒன்று இருக்கிறது.
சொல்லுங்கள் புலவரே! என்று மன்னன் கேட்க…
காட்டை அழிப்பதற்கு முன், அதைப் பார்த்து விட்டு வந்தால் என்று சொல்ல, அப்பயே ஆகட்டும் என்றார். மன்னனும், புலவரும் குதிரைகளில் செல்ல… காட்டை தாண்டி அடுத்த நாட்டிற்கு சென்று விட்டனர்.
”பிரம்மாண்டமாய் மாடமாளிகைகள் கூடகோபுரங்கள்” வியப்பில் ஆழ்ந்தார் மன்னன். நம் நாட்டை விட செழிப்பாகத்தான் இருக்கிறது இத்தேசம் என சொல்லிக் கொண்டிருந்த போதே….
ஒரு வீட்டிலிருந்து குடத்துட்ன பெண் ஒருத்தி வெளியே வந்து குடத்தை தட்டி ஒலியெழுப்ப அந்த தெருவில் இருந்த அத்தனைப் பெண்களும் குடத்துடன் வெளியே வர… ”எங்கே குடத்துடன் செல்கிறீர்கள், கேட்டார் மன்னர்.
”க்கும்…க்கும்” மூளைக்கெட்ட எங்க ராசா கள்வர்களுக்கு பயந்து காட்டை நாடாக்கிட்டான்” இப்ப தண்ணிக்குத்தான் போறோம் விதேக தேச எல்லைக்கு என்றார்கள்.
புத்தி தெளிவானது. அவர்தான் விதேக மன்னராயிற்றே.
----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (15-Dec-15, 2:11 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 310

மேலே