மழையின் பிழை
மழயே ..
பிழை செய்து விட்டாய் !
சென்னையை
சின்னா பின்னமாக்கி
சிதைத்துவிட்டு
உன் கோரமுகத்தை
வெளிர் வானத்துக்குள்
வெட்கிமறைத்துக்கொண்டாய்..!
உயிர்கள்
உடைமைகள்
அனைத்தையும்
தண்ணீருக்குத்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய்
பரிதவித்து நிற்கும்
மக்களின்பாவம்
மழையே உன்னை சும்மாவிடாது .
அழகுநகர்
சென்னையை
அலங்கோலப்படுத்தி
அசிங்கப் படுத்தி
துவம்சம் செய்திட்ட
மழையே ...நீ
மன்னிக்க முடியாத குற்றவாளி !
தண்ணீர் தேசம்
சென்னையில்
வடிந்துகொண்டிருப்பது
தண்ணீர் மட்டுமல்ல
கண்ணீரும்தான் .

