அச்சம் -----முஹம்மத் ஸர்பான்
பிறந்த மறுகணமே!
விடையில்லாத விடுகதைகளில்
மழலையின் அச்சம்
***
தாயின் மார்பகத்தில்
செங்குழல் வாய்மூட
நொடிகள் தாமதிக்க
தெருவில் தவழ்ந்து விளையாட
விட்டுவிட்டாளோ என்று சந்தேகிக்கும்
கண்ணீர் சேயின் அச்சம்
***
சோலைக்குள் ஓடிய பாதங்கள்
பள்ளிக்குள் நடக்கும் போது
நண்பன் அடிப்பானோ?
வாத்தி அடிப்பானோ?என்று
தாயின் சேலை முனைப்பில்
முகம் புதைத்து அடம்பிடிக்கும்
குறும்பு குழந்தையின் அச்சம்.
***
அரும்பு மீசை வளர்ந்த பின்
தோழி என்ற அவளிடம்
யார் வந்து பேசினாலும்
தன் காதல் தோற்றுவிடுமோ?
என்ற உள்ளத்தின் குமுறல்
வாலிபத்தின் அச்சம்
***
பருவமடைந்த பெண்ணின்
அங்கம் ஒளிந்து ரசிக்கும்
கூட்டம் மத்தியில்
பிள்ளைக்காய் காத்திருக்கும்
வேண்டுதல்கள் பெற்றோரின் அச்சம்
***
தண்டில் விளைந்த சின்னப்பூக்களின்
முகத்தில் தேனீயின் இதழ் முத்தம்
நோக வைத்துவிடுமோ? என்று
கோபமாய் வீசும் தென்றலின் அச்சம்
***
கார்மேகம் விண்ணிலிருந்து
மண்நோக்கி பயணிக்கும் நேரம்
மனிதன் தூற்றி விடுவானோ?
என்று தூவித்தூவி தாமதிக்கும்
கணங்கள் இயற்கையின் அச்சம்
***
தன்னை களவாக தோண்டி
மண்ணை முற்றாக அழித்துவிடுவான்
என்ற நேசத்தில் கடலும் சுனாமியாய்
விஸ்வரூபம் பூண்டது திரையின் அச்சம்
***
வயது போன மீசையில்
வெள்ளை முடிகள் தோற்றம் கண்டு
மானும் தன்னை வீழ்த்திவிடுமோ
என்று குகைவாசம் வாழ்வது சிங்கத்தின் அச்சம்
***
சொல் என்ற அகராதியில்
உரிமை மீட்டெடுக்க போராடும்
பேனாக்காரனின் கவிதைகள்
மொழி சாகக் கூடாதென்ற அச்சம்
***
அகிலம் என்பது
அச்சம் என்ற சொல்லி வாழ்கின்றது
மனிதனின் இதயத்துடிப்பிலும்
நின்றுவிடுமோ என்ற அச்சம்
இருக்கத்தான் செய்கிறது
***