காதல் கொள்வாயா
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே
உன் மனத்தாமரையில்
என் காதல் நீர் பட்டுத்தெறித்தது
ஆனால் அதில் ஏனோ ஒட்டமறுத்தது
வாழைமரம் வெட்டிவிட்டால்
வளருமடி
என் வாழ்க்கைமரம் வெட்டிவிட்டாய்
வளருமாடி
காலமழை பேயாகிப் பெய்தும்கூட
வெள்ளம் வந்து வடிந்துவிட்டது
நீ காதல் மழை பெய்யாததால்
என் உள்ளம் நொந்து மடிந்துவிட்டது
காத்திருந்து காதல் செய்ய
நேரமில்லை உனக்கு
நீ மறுத்துவிட்டால் இடுகாடு ஒன்றும்
தூரமில்லை எனக்கு
அழுதாலும் நீர்வைக்க
என் கண்ணில் ஈரமில்லை
அழகோடு சேர்த்துவைக்க
இம்மண்ணில் யாருமில்லை
காக்கைக்கும் தன்குஞ்சு
பொன்குஞ்சு
காதலித்துப்பார் தெரியுமடி
என் பொன்நெஞ்சு
காத்திருப்பேன் கனியும்வரை
உன்நெஞ்சு
கவனிப்பேன் உன்னைநான்
தாயாக
காதலியாய் வருவாயோ
நீயாக ...
பெண்ணே என்னை
காதல் கொள்ளப்போகிறாயா
இல்லை
காதலிக்காமல் கொல்லப்போகிறாயா