சிறு துளிகள்

மூழ்கிக்
கொண்டிருந்த
மனிதத்தை கண்டெடுத்தது
மழை..

*******************************************

கொண்டாட்டத்தில்
தொடங்கியதுதான் அது
பெண்டாட்டியின் தாலியிழப்பில்
முடிந்தது...மது

***********************************************

விழியிழந்த பாடகன்
பாடல் முடிந்து யாசிக்கிறான்
செவியிழந்தனர் ரயில் பயணிகள்

**************************************************

வெள்ளைபூசித் தயாரானது
எங்கள் வீட்டின் சுவர்கள்
துறுதுறுக்கிறது பிஞ்சுக் கைகள்

***************************************************

பள்ளித் தேர்வுகள்
சிம்ம சொப்பனங்கள்..
தொடர்கின்றன..
இரண்டு பிள்ளைகளுக்கு
தந்தையான பிறகும்

****************************************************

அனல்பறக்கும் விவாதம்
அணைக்கப்படும் தொலைகாட்சி
குழந்தைகள் தூங்குகிறார்கள்

****************************************************
விடிகாலை..
காரிருளுக்கு எசப்பாட்டு
பாடும் வெள்ளை இருட்டு..
மூடுபனி..

****************************************************

விடிகாலை பனிமூட்டம்
விழிதிறக்க பெருந்தயக்கம்
போர்வைதேடும் அரைமயக்கம்

****************************************************

ஏரியைத் தேடிய
வெள்ளம் வடிந்ததும்
பாதையை தேடும்
மக்கள் கூட்டம்

****************************************************

எழுதியவர் : ஜி ராஜன் (20-Dec-15, 8:48 am)
Tanglish : siru thulikal
பார்வை : 158

மேலே